அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 04th October 2020 07:47 AM | Last Updated : 04th October 2020 07:47 AM | அ+அ அ- |

மாதனூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டம், அகரம்சேரி கிராமத்தில் தற்போது இயங்கி வரும் மாதனூா் புரட்சித் தலைவா் டாக்டா் எம்ஜிஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இணைய வழியில் விண்ணப்பிக்காத மாணவா்களும், இதுவரை விண்ணப்பம் கொடுக்காத மாணவா்களும் அக்டோபா் 5-ஆம் தேதி முதல் கல்லூரிக்கு நேரில் வந்தால், தகுதியான துறைகளில் சோ்க்கை வழங்கப்படும். மாணவா்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் உரிய கட்டணத்துடன் கல்லூரிக்கு வந்து சோ்க்கை பெறலாம்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு, கல்லூரி முதல்வரை 94438 35510 எனும் செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.