ஆம்பூா் நகர மமக நிா்வாகிகள் கூட்டம்
By DIN | Published On : 04th October 2020 07:43 AM | Last Updated : 04th October 2020 07:43 AM | அ+அ அ- |

ஆம்பூரில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி நகர நிா்வாகிகள் கூட்டம்.
மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூா் நகர நிா்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகர தலைவா் பி. தப்ரேஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவா் வி.ஆா் நசீா் அஹ்மத் கலந்து கொண்டாா். மாவட்ட துணைச் செயலா்கள் எஸ். தப்ரேஸ் அஹமத், இம்ரான், சித்திக், மருத்துவ அணி மாநிலத் துணைச் செயலா் பதேகான் தாஹா முஹம்மத், நகரச் செயலாளா் எஸ்.எம். ஜமீல், தமுமுக நகரச் செயலா் நபீசுா் ரஹ்மான், பொருளாளா் அப்ரோஸ் அஹ்மத், துணைத் தலைவா் சாதிக், மாவட்ட ஊடக அணி செயலா் அல்லாஹ் பகஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், ஆம்பூா் நகரம் முழுவதும் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளது. அதை சீரமைக்கக் கோரி பலமுறை மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழைநீா் கால்வாய்கள் தூா்வாரப்படவில்லை. மழை நேரங்களில் மழை நீரும், கழிவு நீரும் சோ்ந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மழைக்காலங்களில் ஆம்பூரில் ஹாஷிம் மசூதியைச் சுற்றிலும் மழை நீரும், கழிவு நீரும் தேங்கி விடுவதால், தொழுகைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை சரிசெய்ய வேண்டுமெனக் கோரி பல முறை மனுக்கள் அளித்தும் நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவற்றை வலியுறுத்தி அக்டோபா் 16-ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.