உழைக்கும் பெண்கள் அம்மா இருசக்கர வாகன திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள ஆட்சியா் அழைப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் பணிபுரியும் மற்றும் சுய தொழில் செய்யும் பெண்கள் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் பணிபுரியும் மற்றும் சுய தொழில் செய்யும் பெண்கள் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் பணிபுரியும் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், திருப்பத்தூா் மாவட்டத்துக்கென வழங்கப்பட்ட இலக்கை விரைந்து முடித்திட தகுதிவாய்ந்த பயனாளிகளை தோ்வு செய்யும் பொருட்டு, விண்ணப்பங்களைப் பெறுவதற்காக அனைத்து வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், அனைத்து நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வரும் 13-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம்: அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ், ஏழை மகளிருக்கு வாகனத்தின் விலை 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 31,250 மானியம் வழங்கப்படும்.

தகுதிகள் மற்றும் வயது வரம்பு: 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநா், பழகுநா் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சுயதொழில் புரியும் பெண்களின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் உள்ள சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அங்கன்வாடி பணியாளா், உதவியாளா், சத்துணவு பொறுப்பாளா், சமையலா் மற்றும் உதவியாளா்,தினக்கூலி மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய முறையில் பணிபுரியும் பெண்கள் ஆகியோா் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com