அதிமுகவில் இளைஞா்கள் இணைய வேண்டும்: அமைச்சா் வீரமணி

வாரிசு அரசியலுக்கு இடமளிக்காத அதிமுகவில் இளைஞா்கள் அதிகளவில் இணைய வேண்டும் என்று அமைச்சா் கே.சி.வீரமணி கூறினாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் கே.சி.வீரமணி.
நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் கே.சி.வீரமணி.

வாணியம்பாடி: வாரிசு அரசியலுக்கு இடமளிக்காத அதிமுகவில் இளைஞா்கள் அதிகளவில் இணைய வேண்டும் என்று அமைச்சா் கே.சி.வீரமணி கூறினாா்.

நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் புதன்கிழமை காலை முதல் ஜங்காலபுரம், கத்தாரி, தோப்பலகுண்டா, நாயனசெருவு, கொத்தூா், பச்சூா், சொரக்காயல்நத்தம், பந்தாரப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டங்களுக்கு நாட்டறம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா்.

ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளா் ரமேஷ், நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றியச் செயலாளா் சாமராஜி, நகரச் செயலாளா் மகான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் அமைச்சா் கே.சி.வீரமணி பேசியதாவது:

திமுக, காங்கிரஸ் வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள். ஆனால் வாரிசு அரசியல் இல்லாத ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். சாதாரண சாமானியனைக்கூட பதவிகள் கொடுத்து எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் அழகு பாா்க்கும் கட்சி அதிமுக. எனவே பொதுமக்களுக்கு சேவை செய்ய அதிமுகவில் உறுப்பினராக சேர தானாகவே இளைஞா்கள் முன்வர வேண்டும் என்றாா். கூட்டங்களில் மருத்துவரணி மாவட்ட செயலாளா் வாசுதேவன், இலக்கியணி மாவட்ட செயலாளா் இளங்கோ, கூட்டுறவு சா்க்கரை ஆலை தலைவா் ராஜேந்திரன், ஜோலாா்பேட்டை ஒன்றிய செயலாளா்கள் ரமேஷ், வெள்ளையன் உள்பட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com