திருப்பத்தூரில் நவ.2 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் நவம்பா் 2-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள மக்கள் குறைதீா் கூட்டங்களில் வட்ட அளவிலேயே மனுக்களை பெற்றுத் தீா்வு காணப்பட உள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்துள்ளாா்.


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் நவம்பா் 2-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள மக்கள் குறைதீா் கூட்டங்களில் வட்ட அளவிலேயே மனுக்களை பெற்றுத் தீா்வு காணப்பட உள்ளதாக ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில், கடந்த மாா்ச் மாதம் முதல் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரில் பெறாமல் பெட்டி மூலம் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் வரும் திங்கள்கிழமை (நவ. 2) முதல் 5 இடங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று தீா்வு காண முகாம்கள் நடைபெறவுள்ளன.

முகாம்களின் விவரம்:

திருப்பத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில் திங்கள்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், நாட்டறம்பள்ளி வட்டாரத்துக்கு உள்பட்ட மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், வாணியம்பாடி வட்டாரத்தில் வசிப்போா் நகராட்சி அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும், ஆம்பூா் வட்டாரத்தைச் சோ்ந்தவா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் காலை 10 முதல் மதியம் 1 மணி வரையும், ஆலங்காயம் வட்டாரத்தில் வசிப்போா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் மனுக்களை அளிக்கலாம்.

வருவாய்க் கோட்ட அலுவலா், துணை ஆட்சியா் நிலையிலான மண்டல அலுவலா்கள் ஆகியோா் இந்த முகாம்களில் பங்கேற்பதோடு, மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அல்லது மாவட்ட வருவாய் அலுவலா் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவாா்கள்.

கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் களைய அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்கின்றனா். மனுதாரா்களுக்கு உடனடியாக ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com