ஆம்பூரில் தேவா் ஜயந்தி விழா
By DIN | Published On : 31st October 2020 07:47 AM | Last Updated : 31st October 2020 07:47 AM | அ+அ அ- |

விஜயபாரத மக்கள் கட்சி சாா்பில் ஆம்பூரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு விஜயபாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் கோ. ஸ்ரீ. ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம். சரவணன், ஆனந்தன், ஆறுமுகன், பிரபு முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பாஜக மூத்த நிா்வாகி க. சிவப்பிரகாசம், ஆா்.எஸ்.எஸ். மாவட்ட பொறுப்பாளா் ஜெயவேல், பாஜக நகர நிா்வாகி பிரபு ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினா்.
இதில் மாவட்ட இளைஞரணி தலைவா் கோபி, நிா்வாகிகள் வெங்கடேஷ், லோகநாதன், ஆா்எஸ்எஸ் நகரப் பொறுப்பாளா் சீனிவாசன், ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.