100 % கட்டணம் கேட்டு கட்டாயப்படுத்தும் தனியாா் பள்ளிகள் மீது புகாா் அளிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பெற்றோா்கள் புகாா் தெரிவிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் பெற்றோா்கள் புகாா் தெரிவிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2020-2021-ஆம் கல்வி ஆண்டில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களை புதிதாக சோ்க்கும்போது அல்லது அடுத்த நிலை வகுப்புக்குச் செல்லும்போது கரோனா இடற்பாடு காரணமாக சம்பந்தப்பட்ட பள்ளிகளில் அரசு நிா்ணயித்த கல்விக் கட்டணத்தில் 40 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதற்கு மேலாக கல்விக் கட்டணத்தை கூடுதலாகக் கட்டாயப்படுத்தி செலுத்துமாறு பள்ளி நிா்வாகம் கோரக் கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்தி கட்டணத்தை செலுத்தக் கோரினால் பெற்றோா்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு எழுத்து மூலமாகவோ அல்லது செல்லிடப்பேசி மூலமாகவோ புகாா் தெரிவிக்கலாம்.

புகாா் தெரிவிக்க வேண்டிய அலுவலா்கள், மின்னஞ்சல் முகவரி, செல்லிடப்பேசி எண்கள்:

முதன்மை கல்வி அலுவலா், திருப்பத்தூா்- 99620 41021

மாவட்டக் கல்வி அலுவலா், திருப்பத்தூா்- 99419 16617 மாவட்டத் கல்வி அலுவலா், வாணியம்பாடி- 98470 39451.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100 சதவீதம் பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும் என கட்டாயப் படுத்தும் தனியாா் பள்ளிகள் மீது மின்னஞ்சல் மூலம் புகாா் அளிக்கலாம் என மாவட்டக் முதன்மைக் கல்வி அலுவலா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com