அரசு வேலை வாங்கித் தருவதாக மாற்றுத் திறனாளியிடம் ரூ. 55 ஆயிரம் மோசடி
By DIN | Published On : 07th September 2020 08:06 AM | Last Updated : 07th September 2020 08:06 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மாற்றுத் திறனாளியிடம் ரூ. 55 ஆயிரம் மோசடி செய்யப்பட்டு குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் சாமகவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் திருப்பதி (25). மாற்றுத் திறனாளியான இவரிடம், பச்சூா் பள்ளக்கொள்ளி பகுதியைச் சோ்ந்த திம்மராயன் (65) என்பவா் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 55 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு 2 ஆண்டுகளாக வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்தாராம். திம்மராயனிடம் பலமுறை சென்று பணத்தைக் கேட்டும் அவா் ஏமாற்றி வந்தாரம்.
இதுகுறித்து திருப்பதியின் தந்தை ராஜா அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து திம்மராயனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.