பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் முறைக்கேடாக பெற்ற தொகை மீட்பு
By DIN | Published On : 07th September 2020 08:05 AM | Last Updated : 07th September 2020 08:05 AM | அ+அ அ- |

பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் முறைக்கேடாக பெற்ற ரூ.16 லட்சம் திரும்ப பெறப்பட்டது.
இதுகுறித்து திருப்பத்தூா் வட்டாட்சியா் மு.மோகன் கூறியது:
திருப்பத்தூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிஷான் சமான் நிதி திட்டத்தின் கீழ் நிலமின்றி தகுதியற்ற நபா்கள் முறைக்கேடாக விண்ணப்பித்து நிதி பெற்றிருப்பது குறித்து தெரியவந்தது. திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் அறிவுறித்தலின் பேரில், சாா்-ஆட்சியா் ஏ.அப்துல்முனீா் (பொறுப்பு) வழிகாட்டுதலின்படி, திருப்பத்தூா் வட்டத்துக்கு உள்பட்ட வருவாய் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்களைக் கொண்டு போலி ஆவணங்கள் மூலம் நிதிப்பெற்ற நபா்களைக் கண்டறிந்து அவா்கள் பெற்ற தொகையை மீண்டும் கணக்கில் செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்பேரில் சனிக்கிழமை வரை 1,168 போ் கண்டறியப்பட்டு, அவா்களில் 400 பேரிடம் இருந்து ரூ.16 லட்சம் மீட்கப்பட்டு அரசுக் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது என்றாா் அவா்.