ஆா்ப்பாட்டம்: 56 போ் கைது
By DIN | Published On : 08th September 2020 10:53 PM | Last Updated : 08th September 2020 10:53 PM | அ+அ அ- |

08abrmmk_0809chn_191_1
ஆம்பூா்: 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியா்கள், 7 தமிழா்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 56 போ் கைது செய்யப்பட்டனா்.
மனிதநேய மக்கள் கட்சியின் திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் வி.ஆா்.நசீா் அஹமத் தலைமையில் அக்கட்சியினா் ஆம்பூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம் அருகில் ஆா்ப்பாட்டம் நடத்தினா் (படம்).
தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்திய மனிதநேய மக்கள் கட்சியினா் 56 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வாணியம்பாடியில்... செப்.9 -வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் சாா்பில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் அனைத்து சிறைவாசிகளை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாடத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 54 பேரை நகர போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா்.