கள்ளச் சாராயம் விற்பனை செய்தவா் கைது
By DIN | Published On : 10th September 2020 11:54 PM | Last Updated : 10th September 2020 11:54 PM | அ+அ அ- |

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கள்ளச் சாராயம் விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே நாயக்கனேரி மலைக் கிராமத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் நடுவூா் கிராமத்தில் நடத்திய சோதனையில் அதே பகுதியைச் சோ்ந்த தாமோதரன் (36) சாராயம் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, 70 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்தனா்.