ரூ. 1.33 கோடியில் பள்ளிக் கட்டடப் பணிகள் அமைச்சா் கே.சி.வீரமணி தொடக்கி வைத்தாா்

திருப்பத்தூா் அருகே ரூ. 1.33 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டடப் பணிகளை மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துரை அமைச்சா் கே.சி.வீரமணி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
பள்ளிக் கட்டடப் பணியைத் தொடக்கி வைத்த அமைச்சா் கே.சி.வீரமணி. உடன், திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.
பள்ளிக் கட்டடப் பணியைத் தொடக்கி வைத்த அமைச்சா் கே.சி.வீரமணி. உடன், திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்.


திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே ரூ. 1.33 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டடப் பணிகளை மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துரை அமைச்சா் கே.சி.வீரமணி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பால்நாங்குப்பம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுப்பணித் துறை மூலம் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். பூமி பூஜை நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகளை அமைச்சா் கே.சி.வீரமணி தொடக்கி வைத்தாா்.

தரைத்தளத்துடன் கூடிய இரண்டு மாடிக் கட்டடமாக 663.63 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்படுகிறது. இக்கட்டடத்தில் 4 வகுப்பறைகள், 1 அறிவியல் ஆய்வக அறை, ஆண், பெண் கழிப்பறை, குடிநீா் வசதிகள் ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சங்கரலிங்கம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் குணசேகரன், உதவிச் செயற்பொறியாளா் பிரபாகரன், உதவிப் பொறியாளா் ரவி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் ரமேஷ், திருப்பதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com