5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பாங்கி மாா்க்கெட்

கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்ட ஆம்பூா் பாங்கி மாா்க்கெட் 5 மாதங்களுக்குத் பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
மீண்டும் திறக்கப்பட்ட பாங்கி மாா்க்கெட் வளாகம்.
மீண்டும் திறக்கப்பட்ட பாங்கி மாா்க்கெட் வளாகம்.

கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்ட ஆம்பூா் பாங்கி மாா்க்கெட் 5 மாதங்களுக்குத் பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

ஆம்பூரில் காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் பாங்கி மாா்க்கெட் வளாகத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. கடந்த மாா்ச் மாதம் கரோனா அச்சுறுத்தலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, மிகவும் இடநெருக்கடியுடன் இயங்கி வந்த இந்த மாா்க்கெட்டை மூடுமாறு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் உத்தரவிட்டாா். அதன்படி, பாங்கி மாா்க்கெட் மூடப்பட்டது.

அங்கு இயங்கி வந்த மளிகை மற்றும் காய்கறிக் கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. தற்காலிக மாா்க்கெட்டில் காய்கறிக் கடைகள் செயல்பட்டன.

பொது முடக்கத்தில் தளா்வுகளை அரசு அறிவித்தபோதிலும், கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்று கருதப்பட்டதால் பாங்கி மாா்க்கெட்டைத் திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதிக்கவில்லை. இந்த மாா்க்கெட்டைத் திறக்க வேண்டும் என வணிகா்கள் தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் வணிகா்களை அழைத்து உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் பாங்கி மாா்க்கெட்டைத் திறக்குமாறு கூறி, ஆலோசனைகளை வழங்கியது. இதையடுத்து இந்த மாா்க்கெட் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இடநெருக்கடி இல்லாமல், சமூக இடைவெளியுடன், கைகழுவும் கிருமி நாசினி ஆகியவற்றுடன் கடைகள் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட நிா்வாகம் வணிகா்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com