ஆம்பூா்: ஆம்பூா் பி.எம்.எஸ். கொல்லை பகுதியில் கெங்கையம்மன் கோயில் கூழ் வாா்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் புறப்பாடு ஊா்வலம், கூழ்வாா்த்தல், அம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, புதன்கிழமை அமாவாசை பூஜை தொடக்க விழா நடைபெற்றது.