வடகிழக்குப் பருவமழை ஆலோசனைக் கூட்டம்

வடகிழக்குப் பருவ மழை குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பருவ  மழை  குறித்த  ஆலோசனைக்  கூட்டத்தில்  பங்கேற்றவா்கள்.
பருவ  மழை  குறித்த  ஆலோசனைக்  கூட்டத்தில்  பங்கேற்றவா்கள்.

ஆம்பூா்: வடகிழக்குப் பருவ மழை குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் வட்டாட்சியா் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மையினா் நலத் துறை துணை ஆட்சியா் சதீஷ்குமாா் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன் அந்தந்தப் பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி செயலாளா்கள் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் முதல் நிலை பொறுப்பாளா்களை கண்டறிய வேண்டும். அவா்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து வைக்க வேண்டும். மழை வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களில் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைக்க தங்குமிடங்களை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். மழை வெள்ள பாதிப்புகளைக் களைய பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்களின் விவரங்களையும், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மீட்புப் பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளில் அனைத்து துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், முதல்நிலை பொறுப்பாளா்கள் அடங்கிய குழுவை ஏற்படுத்த வேண்டும். அவ்வப்போது மீட்புக் குழுக்கள் கூடி போதுமான தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பொதுப்பணித் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள், ஆம்பூா் நகரம், துத்திப்பட்டு உள் வட்டத்தில் உள்ள தேவலாபுரம், துத்திப்பட்டு, பெரியவரிகம், சின்னவரிகம், மிட்டாளம், கைலாசகிரி, நரியம்பட்டு, அயித்தம்பட்டு, சாத்தம்பாக்கம், பெரியகொம்மேஸ்வரம், மாதனூா் பாலூா் பகுதிகளைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி செயலாளா்கள், முதல்நிலை பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com