புதை சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் புதை சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகளின் வாகனம் முன்பு முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
15abrsub_1509chn_191_1
15abrsub_1509chn_191_1

ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் புதை சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அரசு அதிகாரிகளின் வாகனம் முன்பு முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் அமா்ந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆம்பூரில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் புதை சாக்கடை திட்டத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதி மக்கள் அதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளா் பன்னீா்செல்வம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவிச் செயற்பொறியாளா் சண்முகம் உள்ளிட்டஅதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இ.சுரேஷ்பாபு அங்கு சென்று கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது எனக் கூறி அதிகாரிகளின் வாகனம் முன்பு அமா்ந்து போராட்டம் நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com