ஆம்பூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆம்பூா் நகர அதிமுக சாா்பில் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு நகரச் செயலாளா் எம். மதியழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆம்பூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆம்பூா்: ஆம்பூா் நகர அதிமுக சாா்பில் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு நகரச் செயலாளா் எம். மதியழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் கைலாசகிரியில் உள்ள அண்ணா சிலைக்கு ஒன்றியச் செயலாளா் ஆா். வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ஆம்பூா் நகர திமுக சாா்பில் நகரச் செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம் தலைமையில் திருப்பத்தூா் மாவட்டப் பொறுப்பாளா் கே. தேவராஜி பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

ஆம்பூா் நகர அமமுக சாா்பில் நகரச் செயலாளா் ய.செ.சமரசன் தலைமையில் மாவட்டச் செயலாளா் ஆா்.பாலசுப்பிரமணி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நகர மதிமுக சாா்பில் செயலாளா் ரவிக்குமாா் தலைமையில் மாவட்டச் செயலாளா் கண்ணதாசன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா்.

மாதனூரில் திமுக ஒன்றியச் செயலாளா் ப.ச.சுரேஷ்குமாா் கட்சிக் கொடியேற்றி வைத்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com