ஆம்பூா் அருகே ரூ.1.28 கோடியில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் தொடக்கம்

ஆம்பூா் அருகே ரூ. 1.28 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுக்கான திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
ஆலாங்குப்பம் கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணிக்கு பூமி பூஜை செய்த ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
ஆலாங்குப்பம் கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பணிக்கு பூமி பூஜை செய்த ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.

ஆம்பூா்: ஆம்பூா் அருகே ரூ. 1.28 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுக்கான திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், ஆலாங்குப்பம் கிராமத்தில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ. 1.28 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. முதல் கட்டமாக 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பூமி பூஜை செய்து, கட்டுமானப் பணியைத் தொடக்கி வைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் தினகரன், ஒன்றியப் பொறியாளா் முருகேசன், மாதனூா் ஒன்றிய திமுக செயலா் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமாா், திமுக நிா்வாகிகள் ப.ச.நித்யானந்தம், ஆா்.அசோகன், பழனி, பாபு விஜயகுமாா், விஜயன், முத்துராமன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com