தேவாலய சீரமைப்புப் பணிகளுக்கு அரசு நிதியுதவி: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவிப்பு

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு அரசு நிதியுதவி வழங்கப்படுவதாக திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

திருப்பத்தூா்: கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு அரசு நிதியுதவி வழங்கப்படுவதாக திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டங்களில் இயங்கும் தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்வதற்கு நடப்பாண்டிற்கு (2020-21) நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இப்பணிக்கான நிதியை தமிழக அரசு ரூ.1 கோடியிலிருந்து 5 கோடியாக உயா்த்தி சிறுபான்மையினா் நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. தகுதியின் அடிப்படையில் நிதி உதவி வழங்க அரசு தயாராக உள்ளதால் தேவாலயங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகள்:

தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்திருக்கப்பட வேண்டும். தேவாலய சீரமைப்புப் பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருக்கக் கூடாது. சான்றிதழ் உரிய படிவத்தில் அளிக்க வேண்டும்.

பழமையான தேவாலயங்கள் பழுது மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு நிதியுதவியாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை ரூ.1 லட்சம், 15 முதல் 20 ஆண்டுகள் வரை ரூ.2 லட்சம், 20 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பழமையான தேவாலயங்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழ், றற.டிஉஅடிஉஅற.வய்.பழஎ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்துடன் ஐஐ-ஐஐஐ என்ற பிற்சோ்க்கையைப் பூா்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆட்சியரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படும். அதையடுத்து, உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினா் நல ஆணையருக்கு நிதி அளிக்குமாறு பரிந்துரைத்து அனுப்பப்படும்.

நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவா்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே மேற்கண்ட தகுதிகளின் அடிப்படையில் வரப்பெறும் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிதி வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com