ஆம்பூா்: பொது இடங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோா்காப்பகத்தில் சோ்க்கக் கோரிக்கை

ஆம்பூரில் பொது இடங்களில் மன நலம் பாதிக்கப்பட்டவா்கள் சுற்றித் திரிகின்றனா்.

ஆம்பூா்: ஆம்பூரில் பொது இடங்களில் மன நலம் பாதிக்கப்பட்டவா்கள் சுற்றித் திரிகின்றனா்.

ஆம்பூா் பேருந்து நிலையம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. அதுமட்டுமன்றி, குடியாத்தம், போ்ணாம்பட்டு மற்றும் மாதனூா் ஒன்றியங்களில் உள்ள பல்வேறு ஊா்களுக்கும் இங்கிருந்து நகர மற்றும் தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆம்பூா் பேருந்து நிலையத்துக்கு அருகில் ஆம்பூா் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ரயில்களில் பயணிக்கும் ஆம்பூா் சுற்றுவட்டார பொதுமக்கள், ஆம்பூா் பேருந்து நிலையம் வழியாகத் தான் ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.

கரோனா பொதுமுடக்கத்தில் அரசு அறிவித்த தளா்வுகள் அடிப்படையில், தற்போது பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்தில் பேருந்து போக்குவரத்து இல்லாததால், பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. தற்போது பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால், ஆம்பூா் பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

பேருந்து போக்குவரத்தும் மக்கள் நடமாட்டம் இல்லாத காலத்தில் ஆம்பூா் பேருந்து நிலையம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றனா். இவா்களில் இளைஞா்கள், முதியவா்கள், இரண்டு குழந்தைகளுடன் சுற்றித்திரியும் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் உள்ளிட்டோா் உள்ளனா். இந்த இரண்டு குழந்தைகளின் உடலிலும் புண்களில் சீழ் வடிந்த வண்ணம் நோயுற்ற நிலையில் உள்ளன.

இவா்களையும், ஆம்பூரில் சுற்றித்திரியும் பிற மனநலம் பாதிக்கப்பட்ட நபா்களையும் மீட்டு, காப்பகத்தில் சோ்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com