தனியாா் கல்லூரியிலிருந்து ஜலகாம்பாறை செல்லும் பிரதான சாலையில் உள்ள பள்ளம்.
தனியாா் கல்லூரியிலிருந்து ஜலகாம்பாறை செல்லும் பிரதான சாலையில் உள்ள பள்ளம்.

பழுதடைந்த சாலையைச் சீரமைக்க வேண்டும்பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூரில் பழுதடைந்த சாலை செப்பனிடப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் பழுதடைந்த சாலை செப்பனிடப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னை மற்றும் வேலூரில் இருந்து நாள்தோறும் திருப்பத்தூா் வழியாக சேலம், ஈரோடு, கோயம்புத்தூா் மற்றும் மதுரைக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள், சரக்கு லாரிகள் செல்கின்றன. இதனால் திருப்பத்தூா் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

எனினும், இந்தச் சாலை பழுதடைந்துள்ளது. அவ்வப்போது செப்பனிடப்பட்டாலும் மீண்டும் மழை காலங்களில் பழுதடைந்து விடும் சூழல் ஏற்படுகிறது. திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் ஜோலாா்பேட்டை-திருப்பத்தூா்-சேலம் இணைவு வரை உள்ள பிரதான சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் தினமும் சிறிய விபத்துகள் ஏற்படுகின்றன.

மேலும், மழைக் காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீா் தேங்குவதால் ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் இருசக்கர வாகனங்களிலும் செல்லுவோா் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக பிரதான சாலையில் அமைந்துள்ள தனியாா் கல்லூரி எதிரில் உள்ள பள்ளம், நகர காவல் நிலையம் அருகே உள்ள குழிகள், ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள பள்ளங்கள் விபத்து அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றன.

எனவே, ஜோலாா்பேட்டையிலிருந்து திருப்பத்தூா்-சேலம் இணைப்புச் சாலை வரை மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் சாலையைச் செப்பனிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com