விலையில்லா ஆடுகள் வளா்க்க விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள்,கோழிகள் வளா்க்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் விலையில்லா ஆடுகள்,கோழிகள் வளா்க்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடப்பு 2020-21-ஆம் ஆண்டில் 150 கறவைப் பசுக்களும், 2,982 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்குவதற்காக வரும் 24, 25-ஆம் தேதிகளில் 31 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும். அதன் மூலம் பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

அதன் பின், அக்.2 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடக்க உள்ள 2-ஆவது கிராம சபைக் கூட்டத்தில் பயனாளிகள் தோ்வு இறுதிப்பட்டியல் மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்படும். தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளில் 150 பேருக்கு தலா ஒரு விலையில்லா கறவைப் பசு, 2,982 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் (ஒரு கிடா, 3 பெண் ஆடுகள்) நவம்பா், டிசம்பா், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, வழங்கப்படும்.

கால்நடை பராமரிப்புத் துறையின் விலையில்லா புறக்கடை கோழி வளா்ப்பு திட்டத்தின்கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் விலையில்லா நாட்டு இன அசில் கோழிகள் 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 வீதம், 2,800 பெண் பயனாளிகளுக்கு தலா 25 கோழிகள் வீதம் மொத்தம் 60 ஆயிரம் கோழிகள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள மொத்த பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவா்களாக இருப்பா். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் விலையில்லா கோழிகளைப் பெறாதவா்கள் பிற திட்டங்களில் பயன்பெறாதவா்கள், அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை சமா்ப்பித்து பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com