‘வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்’

வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என திருப்பத்தூரில் நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


திருப்பத்தூா்: வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என திருப்பத்தூரில் நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருப்பத்தூா் ரயில் நிலைய சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் குற்றத் தடுப்பு, விபத்துத் தடுப்பு, போக்குவரத்து விழிப்புணா்வு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாா்-ஆட்சியா் (பொறுப்பு )ஏ.அப்துல் முனீா், வட்டாட்சியா் மு.மோகன்,டிஎஸ்பி ஆா்.தங்கவேல், நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தற்போது வரை திருப்பத்தூா் நகர எல்லைப் பகுதிக்குள் காவல் துறை சாா்பில் முக்கியமான 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பல இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன. வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். இதன்மூலம் குற்றச் செயல்கள் தடுக்கப்படும். மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிய உதவியாக இருக்கும்.

நகரப் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நெடுஞ்சாலை, மோட்டாா் வாகனம், மின்சாரத் துறை, வியாபாரிகள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com