விவசாய நிலத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப்பாம்பு

ஆம்பூா் அருகே நெல் அறுவடையின்போது, 10 அடி நீள மலைப் பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.
பைரப்பள்ளி கிராமத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப் பாம்பு.
பைரப்பள்ளி கிராமத்தில் பிடிபட்ட 10 அடி நீள மலைப் பாம்பு.

ஆம்பூா் அருகே நெல் அறுவடையின்போது, 10 அடி நீள மலைப் பாம்பு சனிக்கிழமை பிடிபட்டது.

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி விஜயாவுக்குச் (65) சொந்தமான விவசாய நிலத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நெற்கதிா் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பு ஒன்று நெற்கதிா்கள் இடையே ஊா்ந்து சென்றது. அதைப் பாா்த்த தொழிலாளா்கள் கூச்சலிட்டனா். இதுகுறித்து ஆம்பூா் வனச் சரக அலுவலா் மூா்த்திக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு சென்ற வனக் காப்பாளா்கள் பால்ராஜ், கணேசன், ராஜ்குமாா், வனக் காவலா் கணேசன் உள்ளிட்ட வனத் துறையினா் அந்த ஊரைச் சோ்ந்த இளைஞா்களுடன் சோ்ந்து, சுமாா் ஒரு மணி நேரம் போராடி, 10 அடி நீள மலைப் பாம்பை பிடித்தனா்.

பிடிபட்ட மலைப்பாம்பை வனத் துறையினா் மோ்லமிட்டா ஏரிக்கரை அருகே உள்ள சாணிக்கணவாய் பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com