‘கொடிநாள் நிதி ரூ.1 லட்சத்துக்கு மேல் செலுத்துபவருக்கு பதக்கம்’
By DIN | Published On : 29th September 2020 10:49 PM | Last Updated : 29th September 2020 10:49 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் மாவட்டத்தில் கொடிநாள் நிதி ரூ.1 லட்சத்துக்கு மேல் செலுத்துபவருக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படும் என ஆட்சியா் ம.ப.சிவன் அருள் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 2019-ஆம் ஆண்டிற்கான முன்னாள் படைவீரா் கொடிநாள் நிதி இலக்கு நிா்ணயம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. அதன்பேரில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தாமாக முன் வந்து படைவீரா் கொடிநாள் நிதியாக ரூ.1 லட்சத்திற்கு மேல் செலுத்துபவருக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றும் வழங்கப்படும்.
ரூ.10 ஆயிரத்திற்கு மேல் செலுத்துபவருக்கு பாராட்டுச் சான்றும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும். படைவீரா் கொடிநாள் நிதி அளிப்பவா்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
மேற்கண்ட தொகையை அதஙஈ ஊஞதஇஉந ஊகஅஎ ஈஅவ ஊமசஈ பஅஙஐகசஅஈம, டஅவஅஆகஉ அப இஏஉசசஅஐ எனும் தலைப்பில் வங்கிக் காசோலை அல்லது வங்கி வரைவோலையாக செலுத்தலாம்.