வாணியம்பாடி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
வாணியம்பாடி - கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே புதூா் ரயில்வே கேட் அருகே 30 வயது மதிக்கத்தக்க ஆண் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவ்வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.