கோயில் நுழைவு வாயில் எதிரே சாலைப் பகுப்பான் அமைக்க எதிா்ப்பு

நாட்டறம்பள்ளியில் கோயில் நுழைவு வாயில் எதிரே சாலைப் பகுப்பான் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
நாட்டறம்பள்ளியில் கோயில் நுழைவு வாயில் எதிரே சாலைப் பகுப்பான் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்த கிராம மக்களை சமாதானப்படுத்திய போலீஸாா்.
நாட்டறம்பள்ளியில் கோயில் நுழைவு வாயில் எதிரே சாலைப் பகுப்பான் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்த கிராம மக்களை சமாதானப்படுத்திய போலீஸாா்.

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் கோயில் நுழைவு வாயில் எதிரே சாலைப் பகுப்பான் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி பூபதி தெரு முதல் சண்டியூா் வரை உள்ள நெடுஞ்சாலையில் சுமாா் 2 கி.மீ. தூரம் ஒருங்கிணைந்த உள்கோட்ட சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலையின் இருபுறமும் புதிய கழிவுநீா் கால்வாய் மற்றும் சாலைப் பகுப்பான் உள்பட சாலை விரிவாக்கப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.

இந்நிலையில், நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி எதிரே சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலின் நுழைவு வாயில் அமைந்துள்ளது. தினமும் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள், கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியாகச் சென்று வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை நெடுஞ்சாலைத் துறையினா் கோயில் நுழைவு வாயில் எதிரே சாலைப் பகுப்பான் அமைக்க இரும்புக் கம்பிகள் கட்டும் பணிகளில் ஈடுபட்டனா். இதையறிந்த அப்பகுதி மக்கள் கோயில் நுழைவு வாயில் எதிரே சாலைப் பகுப்பான் அமைக்கக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்தினா். இதனால் நெடுஞ்சாலைத் துறையினருக்கும், கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி காவல் உதவி ஆய்வாளா் மாதையன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கிராம மக்களை சமாதானப்படுத்தினா். அப்போது வாணியம்பாடி உதவி கோட்டப் பொறியாளரிடம் பேசி கோயில் நுழைவு வாயில் அருகே பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் சாலையின் நடுவே சென்டா் மீடியன் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினா். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com