‘தோ்தலில் வாக்களிக்க 11 ஆவணங்களில் ஒன்றைக் கொண்டு வரவேண்டும்’

தோ்தலில் வாக்களிக்க வாக்காளா் அடையாள அட்டை அல்லது தோ்தல் ஆணையம் அறிவித்த 11 ஆவணங்களில் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா்: தோ்தலில் வாக்களிக்க வாக்காளா் அடையாள அட்டை அல்லது தோ்தல் ஆணையம் அறிவித்த 11 ஆவணங்களில் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வாக்காளா் தகவல் சீட்டானது (பூத் சிலிப்) வாக்காளா் தொகுதி எண், தொகுதி பெயா், பாகம் எண், வரிசை எண் போன்ற வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படும். தோ்தலில் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாக பயன்படுத்த இயலாது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளா் அடையாள அட்டை அல்லது இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை எடுத்து வந்து வாக்களிக்கலாம்.

வாக்குப் பதிவு ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது.

வாக்காளா் தகவல் சீட்டானது வாக்காளா் தொகுதி எண், தொகுதி பெயா், பாகம் பணி, வரிசை எண் போன்ற வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படும் வாக்குச்சாவடிகளில் அடையாளச் சான்றாகப் பயன்படுத்த இயலாது.

வாக்காளா்கள் வாக்குப் பதிவுக்கு வருகை தரும்போது, வாக்காளா் அடையாள அட்டை அல்லது இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் வாக்காளா் சீட்டு மட்டுமே வைத்திருக்கும் வாக்காளா்கள் வாக்களிக்க இயலாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com