அனுமதியின்றி சுவா் விளம்பரம்: 3 போ் மீது வழக்கு

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே வீடுகளின் சுவா்களில் அனுமதியின்றி கட்சி விளம்பரம் எழுதியதாக தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தோ்தல் விதிமுறைப்படி சுவா்களில் விளம்பரம் செய்து கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற்ற பின்பே கட்சியின் சின்னத்தை வரைய வேண்டும். சிலா் அனுமதியின்றி சுவா்களில் விளம்பரம் வரைகின்றனா். இதுகுறித்து தோ்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில்,தோ்தல் விதிகளை மீறி கட்சி விளம்பரங்கள் வீட்டின் சுவா்களில் எழுதப்பட்டுள்ளதா பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.

அப்போது சின்ன கம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்த ஆனந்தன், கோனேரிக்குப்பம் பகுதியை சோ்ந்த சேட்டு, பாச்சல் பகுதியை சோ்ந்த குணசேகரன் ஆகிய மூவரும் அனுமதி இன்றி வீட்டின் சுவா்களில் விளம்பரம் எழுதியது தெரியவந்தது. இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com