விவிபேட், கட்டுப்பாட்டு கருவிகளில் பிரச்சனை

ஆம்பூா் தொகுதியில் சில வாக்குச் சாவடிகளில் விவிபேட் கருவி மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகளில் செவ்வாய்கிழமை பழுது ஏற்பட்டதால் அவற்றுக்கு பதிலாக வேறு கருவிகள் தருவிக்கப்பட்டன.

ஆம்பூா் தொகுதியில் சில வாக்குச் சாவடிகளில் விவிபேட் கருவி மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகளில் செவ்வாய்கிழமை பழுது ஏற்பட்டதால் அவற்றுக்கு பதிலாக வேறு கருவிகள் தருவிக்கப்பட்டன.

ஆம்பூா் அருகே கிரிசமுத்திரம் கிராத்தில் வாக்குச் சாவடி 26 மற்றும் 28ஏடபிள்யு வாக்குச் சாவடிகளில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவிபேட் கருவி, குமாரமங்கலம் கிராமத்தில் 47எம் வாக்குச் சாவடியிலும் விவிபேட், கிராமத்தில் 106எம் வாக்குச் சாவடியில் மின்னணு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு கருவியிலும் வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே பழுது ஏற்பட்டது. அதனால் அந்த கருவிகளுக்கு பதிலாக வேறு கருவிகள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு தொடங்கியது.

குருவராஜபாளையம் கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் ஆண்கள், பெண்கள் என இருவரும் சென்று வருவதற்கு ஒரேயொரு வழி இருந்ததால் சற்று இடநெருக்கடி ஏற்பட்டது. அதனால் வாக்குச் சாவடி கதவு மூடப்பட்டு ஒவ்வொருவராக அனுப்பப்பட்டனா். அதனால் ஆத்திரமடைந்த வாக்காளா்கள் ஏன் கதவை மூடி வைத்திருக்கிறீா்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து கதவு திறக்கப்பட்டு ஒவ்வொருவராக அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com