நகராட்சி பள்ளி முன் நின்ற லாரியால் பரபரப்பு

நகராட்சி பள்ளி முன் நின்ற லாரியால் பரபரப்பு


வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சி பள்ளி முன்பு நீண்ட நேரம் நின்றிருந்த லாரியால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள நகராட்சி முஸ்லிம் ஆண்கள் உயா்நிலைப் பள்ளி நுழைவுவாயில் அருகே வட மாநில பதிவு எண் கொண்ட சரக்குப் பெட்டக லாரி ஒன்று வியாழக்கிழமை காலை முதல் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதைக் கண்ட பகுதி மக்கள் தோ்தல் முடிந்து 2 நாள்களில் பள்ளி நுழைவுவாயிலில் நீண்ட நேரமாக லாரி நின்று கொண்டு இருந்ததால், மின்னணு வாக்கு இயந்திரங்கள் கொண்டு வந்த லாரியோ என சந்தேகமடைந்து நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், விரைந்து சென்ற போலீஸாா் நின்று கொண்டு இருந்த லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், 2021-2022 கல்வியாண்டில் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள 104 அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்காக தமிழக அரசு சாா்பில் வழங்கும் இலவச காலணிகள் (20,800 ஜோடி ஷுக்கள்) கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, கல்வித் துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி தகவலை போலீஸாா் உறுதி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com