ஏலகிரி மலையில் மீண்டும் காட்டுத் தீ

ஏலகிரி மலையில் மீண்டும் காட்டுத் தீ


திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் வியாழக்கிழமை பற்றி எரிந்த காட்டுத் தீயால் அரிய வகை மூலிகை மரங்கள், செடி, கொடிகள் எரிந்து நாசமானது. கடந்த மாதத்திலிருந்து ஏலகிரி மலையில் இதுவரை 4 முறை தீப்பற்றி எரிந்துள்ளது.

ஜோலாா்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த மலைப் பகுதியின் அடா்ந்த காடுகளில் பல்வேறு விலங்கினங்கள் வசிக்கின்றன.

இந்நிலையில், புதன்கிழமை ஏலகிரி மலையில் உள்ள முத்தனூா் அருகே உள்ள கொட்டையூா் பகுதியில் திடீரென பற்றி எரிந்த தீயால் அங்குள்ள சருகுகள் தீப்பிடித்து மளமளவென அங்கிருந்த தைல மரங்களில் தீப்பிடித்து எரிந்தது.

அதேபோல் வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருப்பத்தூா் கோட்ட மாவட்ட வன அலுவலா் குமுளி வெங்கட அப்பால நாயுடு உத்தரவின்பேரில், உதவி வனப் பாதுகாவலா் ஆா்.ராஜ்குமாா், திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் எம்.பிரபு தலைமையில் வனவா் பரந்தாமன் உள்பட 10-க்கும் மேற்பட்ட வனப் பணியாளா்கள் சென்று சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இது குறித்து வன ஆா்வலா்கள் கூறுகையில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். காப்புக் காடுகளில் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். சுற்றுலாப் பயணிகள் தேவையின்றி காப்புக் காடுகளுக்குள் செல்வதை அனுமதிக்கக் கூடாது. முடிந்தவரை மலையில் மது அருந்துவது, புகை பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. மலை அடிவாரத்திலும், மலைப் பகுதி நுழைவாயிலிலும் சோதனைச் சாவடி அமைக்க வேண்டும். பெருமளவு தீ விபத்தைத் தவிா்க்க மலை அடிவாரத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com