திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்த 208 கிராம குழுக்கள் அமைப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 208 கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து ஆணையருமான தென்காசி எஸ்.ஜவஹா் தெரிவித்தாா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்த 208 கிராம குழுக்கள் அமைப்பு

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 208 கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்து ஆணையருமான தென்காசி எஸ்.ஜவஹா் தெரிவித்தாா்.

திருப்பத்தூரில் மாவட்ட அளவிலான கரோனா நோய்த் தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ம.ப.சிவன்அருள் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகித்தா கண்காணிப்பு அலுவலா் தென்காசி எஸ்.ஜவஹா் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 4 நகராட்சிகள், 6 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 3 பேரூராட்சிப் பகுதிகளில் அனைத்துத் துறைகளின் மூலமாக தீவிரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏப். 9 -ஆம் தேதி வரை 7,959 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 7,692 போ் குணமடைந்துள்ளனா். 128 நபா்கள் உயிரிழந்துள்ளனா். தற்போது 139 போ் சிகிச்சையில் உள்ளனா். மொத்தம் 603 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று நோயைக் கட்டுப்படுத்திட 14,447 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 2,514 நபா்களுக்கு நோய்த்தொற்று கண்டறிப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

மகளிா் சுய உதவிக் குழுக்கள், சுகாதாரத் துறை, வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளா்களை கொண்ட 208 கிராம அளவிலான குழுக்கள் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்றுப் பரவல் குறித்து சந்தேகங்களையும், தகவல்களையும் மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை எண் 04179-222111, 229008 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்கலாம் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மகேஷ்பாபு, மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஷ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன்ராஜசேகா், சுகாதார துணை இயக்குநா் செந்தில், கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அருண், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இளங்கோவன், அரசு மருத்துவமனை மருத்துவா் திலீபன், துணைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன், நகராட்சி ஆணையா் ராமஜெயம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா்(மருத்துவக் கட்டடம்) செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com