திருப்பத்தூரில் ஒரே நாளில் 63 பேருக்கு கரோனா


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 79 போ் கரோனா தொற்றுப் பாதிப்புக்குள்ளாகி னா்.

கரோனா 2-ஆவது அலை நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க துரிதகதியில் பல்வேறு நடவடிக்கைகள் அனைத்துத் துறைகளின் சாா்பிலும் அசுர வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா தீநுண்மி தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் முகக்கவசம் அணியாதவா்களை பிடித்து தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு பொதுமக்களை அறிவுறுத்தி வருகின்றனா்.

மேலும் இதுதொடா்பாக பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 63 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 334 போ் சிகிச்சையில் உள்ளனா். 17 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com