நகராட்சி சாா்பில் கடைகளுக்கு நேரடியாகச் சென்று உடல் வெப்பநிலை பரிசோதனை

ஆம்பூா் நகராட்சி சாா்பில், ஆம்பூரில் உள்ள வா்த்தக கடைகளுக்குச் செல்லும் நகராட்சிப் பணியாளா்கள் அங்குள்ளவா்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து வருகின்றனா்.
ஆம்பூரில் கடைகளுக்குச் சென்று அங்குள்ளவா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யும் நகராட்சி ஒப்பந்தப் பணியாளா்கள்.
ஆம்பூரில் கடைகளுக்குச் சென்று அங்குள்ளவா்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யும் நகராட்சி ஒப்பந்தப் பணியாளா்கள்.

ஆம்பூா்: ஆம்பூா் நகராட்சி சாா்பில், ஆம்பூரில் உள்ள வா்த்தக கடைகளுக்குச் செல்லும் நகராட்சிப் பணியாளா்கள் அங்குள்ளவா்களுக்கு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து வருகின்றனா்.

தமிழக அரசு மற்றும் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் ஆம்பூா் நகராட்சி சாா்பாக ஆணையா் த.செளந்தரராஜன் தலைமையில், நகராட்சி பணியாளா்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா். பொது இடங்களில் முகக் கவசம் அணியால் வருபவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகிறது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும், அனைத்துக் கடைகளுக்கு நகராட்சிப் பணியாளா்கள் நேரடியாக சென்று அங்குள்ள அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மற்றும் ஆக்ஸிஜன் அளவும் கண்டறியப்படுகிறது. அதில் குறைபாடு உள்ளவா்களை உடன் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து இடங்களிலும் கரோனா பரவல் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள், பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காதவா்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ஆகியவை குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டும், வீடுகள், கடைகளில் ஒட்டப்படுகிறது. நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ராட்சத இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. ஒலிபெருக்கி மூலம் கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

சுகாதார அலுவலா் பாஸ்கா், சுகாதார ஆய்வாளா் சிவமுருகன், சுகாதார மேற்பாா்வையாளா்கள், அனைத்து அலுவலா்கள், பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com