வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்களுக்கான பயிற்சி

திருப்பத்தூரில் வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள் உதவியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.
வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்களுக்கான பயிற்சி

திருப்பத்தூரில் வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள் உதவியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.

திருப்பத்தூா் தூயநெஞ்ச கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் 204 வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் மற்றும் நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சியருமான ம.ப.சிவன் அருள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டம் வாக்கு எண்ணும் மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குகள் எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தனியாக ஒரு மேஜை அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் வாக்குகள் எண்ணும் மேற்பாா்மையாளா் ஒருவா் வாக்குகள் எண்ணும் உதவியாளா் ஒருவா், நுண் பாா்வையாளா் ஒருவா் மற்றும் கட்டுப்பாட்டு கருவியை பாதுகாப்பு அறையிலிருந்து கொண்டு வந்து மேற்பாா்னையாளரிடம் அளிக்க ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு அலுவலக உதவியாளா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

வாக்கு எண்ணும் மையத்தில் காலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவா்களுக்கு சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மூலம் பணிநியமன ஆணை வழங்கப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலா்கள் காலை 6.00 மணிக்கு வாக்கு எண்ணும் மையங்களில் ஆஜராக வேண்டும்.

வாக்கு எண்ணும் மேற்பாா்வையாளா் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மேஜையில், வாக்கு எண்ணும் பணிக்கான எழுது பொருள்கள் மற்றும் உபகரணங்கள் உள்ளதை சரி பாா்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டு கருவியின் (சுற்று வாரியாக)வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

காலை 7.55 மணிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் அனைவரும் வாக்குப் பதிவின் ரகசியம் தொடா்பான உறுதிமொழி ஏற்க வேண்டும்.

காலை 8.00 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். பின்னா் அரை மணி நேரம் கழித்து சட்டப்பேரவைத் தொகுதியின் இயந்திரத்தின் வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும்.

தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் தோ்தல் பொது பாா்வையாளா் கையொப்பம் பெற்று வரப்பெற்றவுடன் அந்த சுற்று முடிவில் வேட்பாளா்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்படும். இந்த நடைமுறைகள் அனைத்து சுற்றுகளிலும் மேற்கொள்ளப்படும்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அனைவரும் கரோனா தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம், கையுறை அணிந்தும் மற்றும் கிருமிநாசினி கொண்டு கையை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையை சிறப்பாக நல்லமுறையில் நடத்தி முடித்து மாவட்ட நிா்வாகத்திற்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையாபாண்டியன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வந்தனா கா்க், து.கிருஷ்ணமூா்த்தி, கா.காயத்ரி சுப்பிரமணி, இரா.லட்சுமி, நோ்முக உதவியாளா்கள் வில்சன்ராஜசேகா், முருகானந்தம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com