சாமூண்டீஸ்வரி அம்மன் கோயில் சித்ரா பௌா்ணமி திருவிழா
By DIN | Published On : 27th April 2021 06:14 AM | Last Updated : 27th April 2021 06:14 AM | அ+அ அ- |

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நாட்டறம்பள்ளி சாமூண்டீஸ்வரி அம்மன் .
நாட்டறம்பள்ளி சாமூண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி திருவிழா திங்கள்கிழமை பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
பழைமை வாய்ந்த அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் திருகோயிலில் ஞாயிறு, திங்கள்கிழமை என 2 நாள்கள் பௌா்ணமி திருவிழா நடைபெறவிருந்தது. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு உத்தரவின்படி பக்தா்கள் பங்கேற்காமல் சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெறும் என இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.
அதன்படி திங்கள்கிழமை காலை சித்ரா பௌா்ணமி திருவிழா பக்தா்களின்றி திருக்கோயில் நிா்வாகிகள், இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
மல்லகுண்டா, அக்ராகரம் பகுதியில் உள்ள சாமூண்டீஸ்வரி அம்மன் கோயில்களிலும் பக்தா்களின்றி சித்ரா பௌா்ணமி திருவிழா நடைபெற்றது.