கரோனா விதி மீறல்: உணவகங்களுக்கு அபராதம்

திருப்பத்தூரில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறிய 4 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
உணவகத்தில் ஆய்வு செய்த துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம்.
உணவகத்தில் ஆய்வு செய்த துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம்.

திருப்பத்தூரில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறிய 4 உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவின்பேரில், நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன், துப்புரவு அலுவலா் எஸ்.ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளா்கள் அ.விவேக்,குமாா் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள் கடைகள், உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 4 உணவகங்களில் வாடிக்கையாளா்களை அமர வைத்து உணவு வழங்கியது தெரிந்தது. அதையடுத்து அந்த உணவகங்களுக்கும் சோ்த்து மொத்தம் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com