தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ கட்டுப்படுத்துதல் முகாம்

தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ கட்டுப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் கந்திலியில் திங்கள்கிழமை நடைப்பெற்றது.
விசைத்தெளிப்பான் மூலம் தண்ணீரை பீச்சி வெள்ளை ஈ-யை கட்டுப்டுத்துவது குறித்து நடைபெற்ற செயல் விளக்கப் பயிற்சி.

மட்றபள்ளி கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு கந்திலி வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் ராகினி தலைமை வகித்தாா்.

வேளாண்மை அலுவலா் ஜெயசுதா, துணை வேளாண்மை அலுவலா் பழனிவேல், உதவி வேளாண்மை அலுவலா் கிருபாவதி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் வினோத்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்துதல் குறித்து செயல்விளக்கம் அளித்தனா். இந்த முகாமில் கந்திலி சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com