ரயில் பயணியிடம் 68 கிராம் தங்க நகை,பணம் திருட்டு
By DIN | Published On : 27th April 2021 06:15 AM | Last Updated : 27th April 2021 06:15 AM | அ+அ அ- |

ஜோலாா்பேட்டை அருகே ஓடும் ரயிலில் பயணியிடம் 68 கிராம் தங்க நகை மற்றும் ரொக்க பணம் ரூபாய் 50,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கேரள மாநிலம், ஆலப்புழை வடக்கல் பகுதியை சோ்ந்த ரெட் சன்னி(35). இவா் 24-ஆம் தேதி சென்னையில் இருந்து
ஆலப்புழை செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளாா். அப்பொழுது ரயில் நள்ளிரவு காட்பாடி-ஜோலாா்பேட்டை இடையே செல்லும் போது ரெட் சன்னி தூங்கிக் கொண்டிருந்தாா். அவரது பையில் வைத்திருந்த தங்க செயின், மோதிரம், கை செயின் உள்ளிட்ட 68 கிராம் மதிப்புள்ள தங்க நகைகள், செல்லிடப்பேசி, ரூபாய் 50,000 ரொக்கம் காணாமல் போயிருப்பது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
இதுகுறித்து ரெட் சன்னி செய்த புகாரின் பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.