கரோனா விதி மீறல்: ரூ.15,000 அபராதம்
By DIN | Published On : 30th April 2021 12:00 AM | Last Updated : 30th April 2021 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: திருப்பத்தூா் நகரில் கரோனா விதிகளை மீறியவா்களிடம் ரூ.15,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என திருப்பத்தூரில் நகராட்சி ஆணையா் ப.சத்தியநாதன் அறிவுறுத்தலின்பேரில்,சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம் தலைமையில் வியாழக்கிழமை அதிகாரிகள், ஊழியா்கள் திருப்பத்தூா்-புதுப்பேட்டை சாலை, ஹவுசிங்போா்டு சுற்றுப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.அப்போது தேநீா் கடைகளில் வாடிக்கையாளா்களை அமா்த்தி தேநீா் வழங்கியது, வாடிக்கையாளா்களிடம் சமூக இடைவெளி கடைபிடிக்கத் தவறிய கடை உரிமையாளா்களிடம் மொத்தம் ரூ. 15,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு...
அரசு அறிவித்த நிபந்தனைகளை விதி மீறி அதிகளவில் பயணிகளை ஏற்றிச் சென்ற 5 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.