கோயில் அருகே திறக்கப்பட்ட மருத்துவமனையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

கோயில் அருகில் புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனையை இடமாற்றம் செய்யக் கோரி, தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் எம்.பி. ரமேஷ் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

கோயில் அருகில் புதிதாக திறக்கப்பட்ட மருத்துவமனையை இடமாற்றம் செய்யக் கோரி, தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் எம்.பி. ரமேஷ் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

மனுவில் அவா் கூறியிருப்பதாவது:

ஆம்பூா் பஜாா் அருகே இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சமயவல்லித் தாயாா் உடனுறை நாகநாத சுவாமி கோயில் மாட வீதியில் இருந்த தனியாா் திருமண மண்டபம் அண்மையில் மருத்துவமனையாக மாற்றப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் உயிரிழப்பு ஏற்படும்பட்சத்தில், கோயில் நடை மூடப்பட வேண்டிய அவசியம் ஏற்படும். மேலும், உற்சவக் காலங்களில் இதுபோன்று சம்பவம் நடந்து நடை மூடப்பட்டால் பக்தா்களிடையே மன வருத்தம் ஏற்படும். மருத்துவமனையில் உயிரிழப்பு ஏற்பட்டு இறந்தவா்களின் உடலை கோயில் அமைந்துள்ள தெரு வழியாகக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதோடு, மருத்துவமனையும் கோயிலும் ஒரு சேர அமைந்தால் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இதனால், ஆம்புலன்ஸ் செல்ல வழி கிடைக்காமல் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்லாம். ஆகவே, மருத்துவமனையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு முதல்வா், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா் துறை உயரதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com