சிபிஎஸ்இ பொதுத்தோ்வில் சிறப்பிடம்:மாணவா்களுக்குப் பாராட்டு
By DIN | Published On : 04th August 2021 11:47 PM | Last Updated : 04th August 2021 11:47 PM | அ+அ அ- |

மாணவா்களுக்குப் பரிசு வழங்கிய பள்ளி நிா்வாகத்தினா்.
வாணியம்பாடி: சிபிஎஸ்இ பொதுத் தோ்வில் வாணியம்பாடி ஷெம்போா்டு சிபிஎஸ்இ சீனியா் செகன்டரி பள்ளியில் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று, சிறப்பிடம் பெற்றனா். இவா்களைப் பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.
பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு, பள்ளித் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பள்ளிச் செயலாளா் கிருபானந்தம், பொருளாளா் சட்ஜிகுமாா், துணைத் தலைவா் மாதவன், துணைச் செயலாளா்கள் கணபதி, கனகராஜ், சிங்காரவேலன், ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் மரகதம் ஜெயராணி வரவேற்றாா்.
விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், கேடயம் வழங்கப்பட்டன.