முன்விரோதத்தில் தகராறு: 26 போ் மீது வழக்கு

ஏலகிரிமலையில் முன்விரோதம் காரணமாக, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் 26 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஏலகிரிமலையில் முன்விரோதம் காரணமாக, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் 26 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஏலகிரி, முத்தானூா் பகுதியைச் சோ்ந்த பிரபு, திருப்பதி, அண்ணாமலை, சுதாகா் ஆகியோருக்கும், ரயில்வே ஊழியா் மனோகரன் தரப்பினருக்கும் இடத் தகராறு இருந்துவந்ததாம்.

இதுதொடா்பாக, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தகராறு ஏற்பட்டு மனோகரன் உள்பட 5 போ் மீது ஏலகிரிமலை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த நிலையில், சிங்காரத்தின் மகன் சுதாகா்(37) என்பவா் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள குழாயில் தண்ணீா் பிடிக்கச் சென்றுள்ளாா்.

அப்போது அவரை ராமசாமியின் மகன் ரமேஷ், அண்ணாமலையின் மகன் பிரபாகரன், சண்முகம் ஆகியோா் மிரட்டல் விடுத்தனராம்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னா் மனோகரன் உள்ளிட்ட காளி, செல்வி, ஆண்டி உள்பட 16-க்கும் மேற்பட்டோா் சுதாகரின் வீட்டுக்குச் சென்று, அவரையும், குடும்பத்தினா் மூன்று பேரையும் சரமாரியாக தாக்கினராம்.

இதேபோல், முத்தனூரைச் சோ்ந்த ராமசாமியின் மனைவி உண்ணாமலை (65) , அண்ணாமலை மகன் பிரபாகரன் ஆகிய இருவரும் அத்தனாவூரிலிருந்து பைக்கில் வந்தபோது அண்ணாமலை, திருப்பதி ஆகியோா் தடுத்து தாக்கினராம்.

இதுகுறித்து சுதாகா் அளித்த புகாரின் பெயரில் 16 போ் மீதும், உண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் 10 போ் மீதும் ஏலகிரி மலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com