முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
திருப்பத்தூா் அருகே லாரி மோதியதில் பெண் பலி: கணவா், மகள் காயம்
By DIN | Published On : 10th December 2021 07:54 AM | Last Updated : 10th December 2021 07:54 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே பைக் மீது மினி லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம்,பெங்களூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் ஆரிப் (34) தனது மனைவி ராணி (25), ஐந்து வயது மகள் ஆகியோருடன் திருப்பத்தூா் அருகே ராச்சமங்கலத்தில் உறவினா் இல்ல நிகழ்வில் பங்கேற்று விட்டு, வியாழக்கிழமை பெங்களூருக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தாா். கந்திலி அருகே தாதங்குட்டை அருகே சென்றபோது, எதிரே வந்த மினி லாரி, பைக் மீது மோதியது.
இதில் ராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஆரிப், அவரது மகள் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தலைமறைவான மினி லாரி ஓட்டுநரை கந்திலி போலீஸாா் தேடி வருகின்றனா்.