முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
போதைப் பொருள் தீங்கு: மாணவா்களுக்கு விழிப்புணா்வு
By DIN | Published On : 10th December 2021 07:51 AM | Last Updated : 10th December 2021 07:51 AM | அ+அ அ- |

ஜோலாா்பேட்டை, வக்கணம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் தீங்கு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜோலாா்பேட்டை காவல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் அருள்வியானி தலைமை வகித்தாா். உடற்கல்வி ஆசிரியா் திருமூா்த்தி வரவேற்றாா். ஜோலாா்பேட்டை காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு, காவலன் செயலி பயன்பாடு, சாலைகளை பாதுகாப்பாக கடப்பது, சாலை விதிகளை கடைப்பிடிப்பது ஆகியவை குறித்து விளக்கமளித்தாா்.