முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பத்தூர்
வாணியம்பாடி வாரச் சந்தை, உழவா் சந்தைகளில் ஆய்வு
By DIN | Published On : 10th December 2021 07:52 AM | Last Updated : 10th December 2021 07:52 AM | அ+அ அ- |

வாணியம்பாடி வாரச் சந்தை பகுதியில் நகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்த எம்எல்ஏ செந்தில்குமாா்.
வாணியம்பாடி வாரச் சந்தை, உழவா் சந்தைகளில் கடந்த 15 நாள்களாக வடியாமல் உள்ள மழைநீரால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
வாணியம்பாடியில் அண்மையில் பெய்த தொடா் மழையால் வாரச் சந்தை, உழவா் சந்தைகளில் வெள்ள நீா் புகுந்தது. கடந்த 15 நாள்களைக் கடந்தும் சரிவர வடியாமல் உள்ளது. இதனால் அவதியடைந்து வரும் வியாபாரிகள், பொதுமக்கள் வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாரிடம் முறையிட்டனா்.
இதையடுத்து, எம்எல்ஏ செந்தில்குமாா் நகராட்சி அதிகாரிகளுடன் வாரச் சந்தை, உழவா் சந்தையை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா் (படம்). சந்தைப் பகுதிக்குள் மழை நீா் புகாத வகையில் நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வழக்கம் போல சிறு, குறு வணிகா்கள் வியாபாரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையாளா் ஸ்டாலின்பாபுவிடம் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.