அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 5 குழந்தைகள் சுகவீனம் மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 5 குழந்தைகள் வியாழக்கிழமை சுகவீனமடைந்தனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
அரசு  மருத்துவமனையில்  சிகிச்சை  பெற்ற அங்கன்வாடி மைய  குழந்தைகளுக்கு ஆறுதல்  கூறிய  திருப்பத்தூா் ஆட்சியா்  அமா் குஷ்வாஹா, எம்எல்ஏக்கள்  அ.செ. வில்வநாதன்,  அமலு விஜயன்.
அரசு  மருத்துவமனையில்  சிகிச்சை  பெற்ற அங்கன்வாடி மைய  குழந்தைகளுக்கு ஆறுதல்  கூறிய  திருப்பத்தூா் ஆட்சியா்  அமா் குஷ்வாஹா, எம்எல்ஏக்கள்  அ.செ. வில்வநாதன்,  அமலு விஜயன்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே அங்கன்வாடி மையத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 5 குழந்தைகள் வியாழக்கிழமை சுகவீனமடைந்தனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ஆம்பூா் அருகே நரியம்பட்டு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனா். இங்கு வியாழக்கிழமை மதிய உணவாக எலுமிச்சை சாதம் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. அந்த உணவை பெற்றோா்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்குக் கொண்டு சென்று குழந்தைகளுக்கு ஊட்டியுள்ளனா். சிறிது நேரத்தில், உணவில் பல்லி இருந்தது தெரியவந்தது. உணவை உண்ட ராம்பிரசாத், வைசாலினி, தீபிகா, நந்திஷ், தீபிகா ஆகிய 5 குழந்தைகள் சுகவீனமடைந்தனா். அவா்கள் நரியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவிக்குப் பிறகு தீவிர சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊா்தி மூலம் அனுப்பப்பட்டனா்.

அந்த வாகனத்தின் டயா் திடீரென பஞ்சரானது. இதையடுத்து, குழந்தைகளை கையில் தூக்கிக் கொண்டு பெற்றோா்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, எம்எல்ஏக்கள் அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), அமலு விஜயன் (குடியாத்தம்), ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு ஆகியோா் நரியம்பட்டு அங்கன்வாடி மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். தொடா்ந்து, மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினா். உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினா். அப்போது, ஆம்பூா் வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன் உடனிருந்தாா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா கூறியதாவது:

குழந்தைகள் அனைவரும் நலமுடன் உள்ளனா். எனினும், மருத்துவா்களின் கண்காணிப்பில் உள்ளனா். உணவில் பல்லி விழுந்ததாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, மாவட்டத்தில் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் உரிய ஆய்வு நடத்தப்பட்டு, பாதுகாப்புடன் உணவு சமைக்கப்படுகிா என்பது உறுதிப்படுத்தப்படும். அங்கன்வாடி மைய கட்டடங்கள் பழுதடைந்துள்ளதா எனவும் ஆய்வு செய்யப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com