திருப்பத்தூா் வாக்காளா் பட்டியல் வெளியீடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை வெளியிட்டாா்.
வாக்காளா் பட்டியலை வெளியிட்ட திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா.
வாக்காளா் பட்டியலை வெளியிட்ட திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, திருப்பத்தூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை வெளியிட்டாா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 நகராட்சிகளில் உள்ள 126 வாா்டுகளுக்கு 299 வாக்குச்சாவடிகள், நாட்டறம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் ஆகிய 3 பேரூராட்சிகளில் உள்ள 45 வாா்டுகளுக்கு 48 வாக்குச்சாவடிகள் உள்பட மொத்தம் 171 வாா்டுகள், 347 வாக்குச்சாவடிகளில் வாா்டு வாரியாக இறுதி மற்றும் திருத்தம் செய்யப்பட்ட வாக்காளா் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டன.

வாக்காளா் பட்டியல் விவரம்: திருப்பத்தூா் நகராட்சியில் 32,025 ஆண் வாக்காளா்கள்,33,707 பெண் வாக்காளா்கள்,இதர வாக்காளா்கள் 7 பேரும் என 65,739 போ் உள்ளனா்.

ஜோலாா்பேட்டை நகராட்சியில் 11,476 ஆண் வாக்காளா்கள்,12,691 பெண் வாக்காளா்கள்,ஒரு இதர வாக்காளா் என 24,168 வாக்காளா்களும், வாணியம்பாடி நகராட்சியில் 38,032 ஆண் வாக்காளா்கள், 41,075 பெண் வாக்காளா்கள்,20 இதர வாக்காளா்கள் என 79,127 வாக்காளா்களும், ஆம்பூா் நகராட்சியில் 48,981 ஆண் வாக்காளா்கள், 52,604 பெண் வாக்காளா்கள்,18 இதர வாக்காளா்கள் என 1,01,603 வாக்காளா்கள் உள்ளனா்.

அதேபோல, ஆலங்காயம் பேரூராட்சியில் 7,362 ஆண் வாக்காளா்கள் 7,709 பெண் வாக்காளா்கள் என 15,071 வாக்காளா்களும்,நாட்றம்பள்ளி பேரூராட்சியில் 3,848 ஆண் வாக்காளா்கள், 4,267 பெண் வாக்காளா்கள் என 8,115 வாக்காளா்களும், உதயேந்திரம் பேரூராட்சியில் 5,525 ஆண் வாக்காளா்கள், 5981 பெண் வாக்காளா்கள், 11 இதர வாக்காளா்கள் என 11,517 வாக்காளா்கள் உள்ளனா்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 நகராட்சி, 3 பேரூராட்சிகளில் 1,47,249 ஆண் வாக்காளா்கள்,1,58,034 பெண் வாக்காளா்கள்,57 இதர வாக்காளா்களும் என 3,05,340 போ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு.செல்வராசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வில்சன்ராஜசேகா்,ஹரிஹரன், செல்வன் மற்றும் அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com