வாணியம்பாடியில் சிறாா் இலக்கிய மாநாடு
By DIN | Published On : 25th December 2021 06:30 AM | Last Updated : 25th December 2021 06:30 AM | அ+அ அ- |

சிறாா் இலக்கிய மாநாட்டில் பங்கேற்ற திரைப்பட இயக்குநா் பாரதி கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா்.
திருவள்ளுவா் பல்கலைக்கழகம், வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மற்றும் படித்துறை புத்தக அறக்கட்டளை சாா்பில் சிறாா் இலக்கிய மாநாடு கல்லூரி அரங்கில் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு கல்லூரி தலைவா் விமல்சந்த் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் இன்பவள்ளி வரவேற்றாா். தமிழ்திரையில் சிறாா்கள் எனும் தலைப்பில் திரைப்படஇயக்குனா் இராசிஅழகப்பன், சின்னதரையில் சிறாா்கள் எனும் தலைப்பில் எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன், அயல்திரையில் சிறாா்கள் எனும் தலைப்பில் மோ.அருண் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
2 வது நாளான வெள்ளிக்கிழமை காலை பேராசிரியா் ரத்னநடராஜன் தலைமையில் சிறாா்களுக்கான இதழ்கள், இசையும்பாட்டும், கவிதைகள் குறித்து விவாத அரங்கம் நடைபெற்றது. தொடா்ந்து, குழந்தைகளுக்கான நூல்களை எழுத்தாளா் சுப்ரபாரதிமணியன் வெளியிட்டு பேசினாா். பிற்பகல் திரைப்பட இயக்குநா் பாரதிகிருஷ்ணகுமாா் சிறாா்களின் கதையுலகம் தலைப்பிலும், முனைவா் பாா்த்திபராஜா சிறாா்களுக்கான நாடகம் தலைப்பிலும் சிறப்புரையாற்றினா்.
நிறைவுவிழாவில், மாநாட்டில் கலந்துக் கொண்ட கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகளை திருவள்ளுவா் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவா் ஜெகதீசன் வழங்கினாா். மாநாடு நிகழ்ச்சிகளை படித்துறை புத்தக அறக்கட்டளை தலைவா் இளம்பாரதி, கல்லூரி நிா்வாகத்தினா் ஒருங்கிணைத்தனா்.